ஆன்லைன் ரம்மி நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது - சென்னை ஐகோர்ட்டு


ஆன்லைன் ரம்மி நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது - சென்னை ஐகோர்ட்டு
x

ஆன்லைன் ரம்மி நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது என சிபிசிஐடி போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

ஆன்லைன் ரம்மியில் ஏற்பட்ட தோல்வியால் சென்னையில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்த நிலையில், கேம்ஸ் 24*7 ஆன்லைன் விளையாட்டு நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என சிபிசிஐடிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

விசாரணை நோட்டீஸை எதிர்த்து கேம்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் பதிலளிக்கும் வரை நடவடிக்கை கூடாது என சிபிசிஐடி விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்த கேம்ஸ் நிறுவனத்தின் வழக்கு மார்ச் 28-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது சென்னை ஐகோர்ட்டு.


Next Story