ரேஷன் கடை பணியாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி
தர்மபுரி:
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் பொது வினியோக திட்டத்திற்கு தனித்துறையை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினார்கள். இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான ரேஷன் கடை பணியாளர்கள் பங்கேற்றனர். இதனால் மாவட்டத்தில் பல இடங்களில் ரேஷன் கடைகளில் நேற்று 2-வது நாளாக குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் வினியோகிக்கும் பணி பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற ரேஷன் கடை பணியாளர்கள் நேற்று தர்மபுரி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story