புதிய தார்ச்சாலை அமைக்கக்கோரி மறியல்


புதிய தார்ச்சாலை அமைக்கக்கோரி மறியல்
x

சாயல்குடி அருகே புதிய தார்ச்சாலை அமைக்கக்கோரி மறியல் போராட்டம் நடந்தது.

ராமநாதபுரம்

சாயல்குடி,

சாயல்குடி அருகே கமுதி சாலை விலக்கு ரோட்டில் இருந்து ஏ.உசிலங்குளம், வேடகரிசல்குளம், எம்.புதுகுடியிருப்பு, எம்.கரிசல்குளம், மணிவலை, வெள்ளம்பல், அல்லிக்குளம், கூரான்கோட்டை செல்லும் சாலை கடந்த 2 ஆண்டுகளாக கரடு முரடாக காணப்படுகிறது. சாரல் மழை பெய்தால் கூட இந்த வழியே அரசு பஸ் இயக்கப்படுவதில்லை. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் ஏ.உசிலங்குளம் கிராமச் சாலையில் திரண்டனர். புரட்சிகர இளைஞர் முன்னணி மாவட்ட பொறுப்பாளர் தமிழ்முருகன், மணிவலை கிராமத்தைச் சேர்ந்த சண்முகநாததுரை, வேடகரிசல்குளம் ராஜாமணி, முனியசாமி, புது குடியிருப்பு சந்த வழியான், எம்.கரிசல்குளம் முத்து முருகன், அல்லிக்குளம் சோலையப்பன், கூரான்கோட்டை பாண்டி, வெள்ளம்பல் தர்மர், ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் கடலாடி ஒன்றிய ஆணையாளர் ஜெய ஆனந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். விரைந்து சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின்னர் மறியல் கைவிடப்பட்டது.


Related Tags :
Next Story