உலா வந்த காட்டு யானைகள்


உலா வந்த காட்டு யானைகள்
x
தினத்தந்தி 27 Jun 2023 2:30 AM IST (Updated: 27 Jun 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் உலா வந்த காட்டு யானைகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி


கோத்தகிரி


கோத்தகிரி அருகே குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பலா மரங்கள் பயிரிடப்பட்டு உள்ளன. இந்த பலா மரங்களில் தற்போது சீசன் காரணமாக பலாப்பழங்கள் காய்க்க தொடங்கி உள்ளன. சீசன் சமயத்தில் காய்த்து குலுங்கும் பழங்களை உண்பதற்காக சமவெளிப் பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் இப்பகுதிக்கு வந்து முகாமிட்டு உள்ளன. இவ்வாறு முகாமிட்ட யானைகள் அருகில் உள்ள தேயிலை தோட்டங்கள், சாலைகளில் தொடர்ந்து நடமாடி வருகின்றன. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் முள்ளூர் பகுதியில் சாலையோரத்தில் குட்டியுடன் 4 காட்டு யானைகள் நின்று கொண்டிருந்தன. குட்டியுடன் நின்றதால், யானைகள் வாகனங்களை தாக்கக்கூடும் என்பதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதனால் தங்களது வாகனங்களை சற்று தொலைவிலேயே பாதுகாப்பாக நிறுத்தினர். நீண்ட நேரம் அங்குள்ள செடி, கொடிகளை தின்ற யானைகள் பின்னர் அருகிலிருந்த வனப்பகுதிக்குள் சென்றன. இதனால் அந்த சாலையில் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



Next Story