கொளத்தூர் அருகே கண்ணாமூச்சி கிராமத்தில்விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
மேட்டூர்
சேலம் மாவட்டம் கொளத்தூரை அடுத்த கண்ணாமூச்சி கிராமத்தில் மூலபனங்காடு என்ற இடத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று தொடங்கியது. சங்க மாநில துணைத்தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின் போது, பனை மரங்களில் இருந்து பதனீர் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும். மேட்டூர் உபரிநீரை கொளத்தூர் அருகே சென்றாய பெருமாள் கோவில் பகுதியில் இருந்து உயர்அழுத்தம் கொடுத்து தண்ணீரை குழாய்கள் மூலம் ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரை எடுத்து சென்று ஏரி, குளங்களில் நிரப்பினால் சுமாார் 25 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவார்கள். எனவே அந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் சுழற்சி முறையில் கலந்து கொள்வார்கள் என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.