மேச்சேரியில் சாலையில் தேங்கிய கழிவுநீரை அகற்றகோரிமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்
சேலம்
மேச்சேரி
மேச்சேரி- மேட்டூர் சாலையில் மேச்சேரி பேரூராட்சி எல்லை முடியும் பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் கழிவுநீரில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் சூழல் உள்ளது. இந்த நிலையில் சாலையில் தேங்கிய கழிவுநீரை அகற்றகோரியும், மேச்சேரி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கழிவுநீரில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய செயலாளர் மணிமுத்து தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் துணைத்தலைவர் தங்கவேலு, முன்னாள் ஒன்றிய செயலாளர் ரத்தினவேல், பேரூராட்சி கவுன்சிலர் பழனி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மாது அம்மாசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story