பணி நிரந்தரப்படுத்த வலியுறுத்திசேலத்தில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்
சேலம்
சேலம்
தமிழ்நாடு தூய்மை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் குணாளன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் மணிமாறன், வக்கீல் மோகன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். பூபதி வரவேற்று பேசினார். இதில் அனைத்து தூய்மை பணியாளர்களையும் பணி நிரந்தப்படுத்த வேண்டும். வாரவிடுமுறை நாட்களில் பணியில் ஈடுபட்டால் இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். பணிமாற்றத்தை ரத்த செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தூய்மை தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story