விவசாயிகள் குடும்பத்தினருடன் தர்ணா போராட்டம்


விவசாயிகள் குடும்பத்தினருடன் தர்ணா போராட்டம்
x

போச்சம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் குடும்பத்தினருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

மத்தூர்

தர்ணா போராட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள குள்ளம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. விவசாயி. இவருக்கு சொந்தமாக 75 சென்ட் நிலம் உள்ளது. இதில் 5 சென்ட் நிலத்திற்கு செய்யப்பட்ட பட்டாவை ரத்து செய்து கொடுக்க வேண்டும் என இவர்களது மகன்கள் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தார். 6 ஆண்டுகள் ஆகியும் அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தநிலையில் பட்டா மாற்றம் செய்து தர கோரியும், வருவாய்த்துறை அலுவலர்களை கண்டித்தும் நேற்று காலை தாலுகா அலுவலக அறை முன்பு கோவிந்தசாமியின் மகன்கள் குடும்பத்தினருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தாசில்தார் பிரதாப், விவசாயி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தை

அப்போது பட்டா மாறுதல் சரி செய்யும் வரை தர்ணா போராட்டத்தை கைவிட அவர்கள் மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பட்டா மாற்றம் செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

இதையடுத்து அவர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story