ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

ஈரோடு


ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி மையங்களில் கியாஸ் சிலிண்டருக்கான முழு தொகையை வழங்க வேண்டும் அல்லது ஆண்டுக்கு 4 சிலிண்டர்களை அரசே ஏற்று வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். 15 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் மையத்தை ஒன்றொடொன்று இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். பழுதடைந்த செல்போன்களுக்கு பதிலாக புதிய செல்போன்கள் வாங்கி கொடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் ஈரோடு கலெக்டர் அலவலக வளாகத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோஷம்

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் எஸ்.ராதாமணி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் எஸ்.மணிமாலை கலந்துகொண்டு பேசினார். இதில் மாவட்ட செயலாளர் எஸ்.சாந்தி, பொருளாளர் எம்.அமுதா உள்பட அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.


Next Story