அ.தி.மு.க.வினர் மறியல் போராட்டம்


அ.தி.மு.க.வினர் மறியல் போராட்டம்
x
தினத்தந்தி 20 Oct 2022 12:15 AM IST (Updated: 20 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம்

எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியல் போராட்டம்

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவராக பதவி வகிக்கும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பதிலாக ஆர்.பி.உதயகுமாரை அந்த பதவியில் நியமித்து இருக்கை ஒதுக்கீடு செய்யுமாறு அ.தி.மு.க. தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை சபாநாயகர் ஏற்காததால் சட்டமன்றத்தை புறக்கணித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரத போராட்டம் அறிவித்தனர். இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைமை நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நகர செயலாளர் பால்பாண்டியன், எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் ரெத்தினம், மாவட்ட அவைத்தலைவர் சாமிநாதன், மாவட்ட இணை செயலாளர் கவிதாசசிகுமார், சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் ஜெ.பேரவை சேதுபாலசிங்கம், மாணவரணி செந்தில்குமார், ஐ.டி. பிரிவு சரவணகுமார், விவசாய அணி ராதாகிருஷ்ணன், இளைஞரணி செயலாளர் ஸ்டாலின் ஜெயச்சந்திரன், துணை செயலாளர் செல்வராஜ், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி.மருதுபாண்டியன், ராம்கோ தலைவர் சுரேஷ், இயக்குனர் தஞ்சி சுரேஷ், மகளிரணி ஜெயிலானி, நாகஜோதி உள்பட பலர் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் முனியசாமி உள்பட 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.

திருவாடானை, கமுதி

திருவாடானை பஸ் நிலையம் அருகே அ.தி.மு.க.வினர் அனைத்து உலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ஆனிமுத்து தலைமையில் நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடப்பாடி பழனிசாமி கைதை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

கமுதி பஸ்நிலையம் முன்பு கமுதி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கமுதி ஒன்றிய செயலாளர் காளிமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் பெரியசாமி தேவர், ஒன்றிய அவை தலைவர் பம்மனேந்தல் சேகரன், ஓ.கரிசல்குளம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வமேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கமுதி ஒன்றிய இளைஞரணி செயலாளர் கருமலையான், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தோப்படைப்பட்டி பூமிநாதன், ஒன்றிய கவுன்சிலர் கரிசல்குளம் மூர்த்தி, எருமக்குளம் ஊராட்சி மன்ற துணை தலைவர் மணிகண்டன், மின்சார வாரிய ராஜேந்திரன், ஒன்றிய தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நிர்மல் குமார், கூட்டுறவு சங்க தலைவர் பம்மனேந்தல் கருப்பசாமி பாண்டியன், வில்லானேந்தல் வில்வதுரை, வேப்பங்குளம் மாரி, காத்தனேந்தல் போஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சாயல்குடி

சாயல்குடியில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அந்தோணிராஜ், சாயல்குடி பேரூர் செயலாளர் ஜெய பாண்டியன் ஆகியோர் தலைமையில் போராட்டம் நடந்தது. மாவட்ட பிரதிநிதி அமிர்த பாண்டியன், முன்னாள் சாயல்குடி பேரூர் செயலாளர் பெரியசாமி, சாயல்குடி பனைவெல்ல கூட்டுறவு சங்கத் தலைவர் சேகர், வார்டு செயலாளர் ஜெயசீலன், தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் அதிபன் சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையொட்டி சாயல்குடி மும்முனை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஜெய்சித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் சல்மோன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட சாயல்குடி ஒன்றிய செயலாளர் அந்தோணிராஜ், பேரூர் செயலாளர் ஜெயபாண்டியன் உள்ளிட்ட 26 பேரை கைது செய்தனர்.

பரமக்குடி

பரமக்குடியில் பஸ் நிலையம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில மகளிர் அணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. நிறைகுளத்தான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் முத்தையா, சதன் பிரபாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் உதுமான் அலி, மாவட்ட பிரதிநிதி கனகராஜ், பரமக்குடி ஜெயலலிதா பேரவை நகர் செயலாளர் வடமலையான் உள்பட பலர் கந்து கொண்டனர்.


Next Story