பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்
பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது
சிவகங்கை
சிவகங்கை,
மத்திய பட்ஜெட்டில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ரூ.12 லட்சம் கோடி வங்கி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதை கண்டித்தும், விவசாயிகளுக்கான அனைத்து இடுபொருள்களும் விலை உயர்ந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வீரபாண்டி தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மோகன், மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன், வி.தொ.ச. மாவட்ட செயலாளர் பொன்னுச்சாமி, மாவட்டத்தலைவர் மணியம்மா, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைச்செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட துணைத்தலைவர் அழகர்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story