விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்


விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்
x
தினத்தந்தி 12 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-13T00:15:37+05:30)

ஊத்தங்கரையில் விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய அரசை கண்டித்து ஊத்தங்கரையில் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்ட செயலாளர் மகாலிங்கம், தமிழ்நாடு விவசாய சங்க வட்ட செயலாளர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் சபாபதி, அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் நல சங்க மாநில குழு உறுப்பினர்கள் லெனின், பகுதி செயலாளர், வட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி பட்ஜெட் நகலை தீயிட்டு எரிக்க முயன்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story