ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு மூலப்பாளையம் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ஜி.ராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிச்சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம், முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

இதில், மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களான எல்.ஐ.சி. பங்குகளையும், எஸ்.பி.ஐ. வங்கியின் பங்குகளையும் அதானி குடும்பத்துக்கு விற்றதை கண்டித்தும், மேலும் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதில் வட்டார தலைவர்கள் கோபாலகிருஷ்ணன், முருகேஷ், கதிர்வேல், ரவி, ஈஸ்வரமூர்த்தி, ராவத் குமார், மூத்த நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, சீதாபதி பழனிவேல், வடுகப்பட்டி பேரூராட்சி தலைவர் விஸ்வநாதன், பேரூர் தலைவர்கள் வேலுச்சாமி, சுந்தரம், பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.


Next Story