மகிளா காங்கிரசார் கையில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்


மகிளா காங்கிரசார் கையில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்
x
தினத்தந்தி 30 March 2023 12:15 AM IST (Updated: 30 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மகிளா காங்கிரசார் கையில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தினர்

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட மகிளா காங்கிஸ் கட்சியின் சார்பில் ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ராமநாதபுரம் அரண்மனை முன்பாக கையில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி ராமலட்சுமி தலைமை வகித்தார்.

இதில் மகிளா காங்கிரஸ் மாநில செயலாளர் பெமிலா விஜயகுமார், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் ரமேஷ்பாபு, ராஜாராம் பாண்டியன் கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர், இந்த போராட்டத்தில் நகர் தலைவர் கோபி, வட்டார தலைவர்கள் திருப்புல்லாணி சேது பாண்டியன், காருகுடி சேகர், அன்வர் அலி, சிறுபான்மை பிரிவு இப்ராஹிம் மற்றும் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு கையில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story