எல்.ஐ.சி. அலுவலகம் முற்றுகை போராட்டம்
எல்.ஐ.சி. அலுவலகம் முற்றுகை போராட்டம் நடந்தது.
பரமக்குடி,
ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து பரமக்குடி நகர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பரமக்குடியில் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்திற்கு மாவட்ட பொறுப்பு குழு தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மலேசியா பாண்டியன் தலைமை தாங்கினார். பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ரமேஷ் பாபு, தெய்வேந்திரன், ராஜாராம் பாண்டியன், கோட்டை முத்து, மாநில செயலாளர் செந்தாமரைக்கண்ணன் முன்னிலை வகித்தனர். பரமக்குடி நகர் தலைவர் அகமது கபீர் வரவேற்றார்.
மாநில பொது குழு உறுப்பினர்கள் கோதிபாலன், முத்துகிருஷ்ணன், மேகநாதன், பூவலிங்கம், மாநில செயலாளர் ஆனந்தகுமார், மகிலா காங்கிரஸ் மாநில தலைவர் அப்துல் அஜீஸ், நெசவாளர் அணி கோதண்டராமன், மாநில மகளிர் அணி துணை செயலாளர் பிரமிளா ஜெயக்குமாரி, மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் ராமலட்சுமி, முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சரவணன் காந்தி, வட்டார தலைவர்கள் பாம்பூர் ஜெயக்குமார், ஆர்ட் கணேசன், ஐ.டி.பிரிவு காஜா நஜ்முதீன், பசும்பொன்அப்தாகிர் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர் பொது செயலாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.