ரேஷன் கடை பணியாளர்கள் போராட்டம்

கிருஷ்ணகிரியில் ரேஷன் கடை பணியாளர்கள் போராட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை எதிரில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நாகேஷ் வரவேற்றார். மாநில செயலாளர் பழனிசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் ராமசாமி, மாவட்ட துணைத்தலைவர் செல்வம், வட்ட தலைவர்கள் கிருஷ்ணன், வேணுகோபால், ரமேஷ் ஆகியோர் பேசினர். மாநிலத் தலைவர் கிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட பொருளாளர் நித்தியானந்தன் நன்றி கூறினார். போராட்டத்தில் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ரேஷன் கடை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story