ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஒட்டுமொத்த விடுப்பு போராட்டம்


ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஒட்டுமொத்த விடுப்பு போராட்டம்
x
தினத்தந்தி 12 May 2023 12:15 AM IST (Updated: 12 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஒட்டுமொத்த விடுப்பு போராட்டம் நடத்தினர்.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் ஊழியர் விரோத அரசாணையை ரத்து செய்வது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பணியாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. பணிகள் முழுமையாக முடங்கியது. நேற்று யூனியன் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் அலுவலர்கள் யாரும் பணியில் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.


Next Story