ஊரக வளர்ச்சி துறையினர் தற்செயல் விடுப்பு போராட்டம்
ஊரக வளர்ச்சி துறையினர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் ஊராட்சி செயலாளர்களுக்கு பணி விதிகளை வெளியிட வேண்டும், 100 நாள் வேலை திட்டத்திற்கு வட்டார அளவில் வட்டார திட்ட அலுவலர் பணியிடம் ஏற்படுத்த வேண்டும், பதவி உயர்வு ஆணைகளை உடனடியாக வெளியிட வேண்டும், போராட்ட காலத்தினை பணி வரண்முறை செய்து ஆணை வெளியிட வேண்டும் போன்ற 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை உதவி இயக்குனர், ஊராட்சிகள் வளர்ச்சி பிரிவு, உதவி இயக்குனர் தணிக்கை, மாவட்ட ஊராட்சி அலுவலகம் மற்றும் 11 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஊழியர்கள் அனைவரும் தற்செயல் விடுப்பு எடுத்து பணிகளை புறக்கணித்தனர். இதனால் மேற்கண்ட அலுவலகங்களில் ஊழியர்கள் யாரும் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. இதன்காரணமாக மேற்கண்ட அலுவலகங்களில் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டன. யூனியன் அலுவலகங்கள் வெறிச்சோடியதால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.