இந்து ஆட்டோ முன்னணி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
இந்து ஆட்டோ முன்னணி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருப்பூர்
இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் திருப்பூர் குமரன் சிலை முன் நடைபெற்றது. அன்னிய நாட்டு நிறுவனங்கள் ஏழை, எளிய ஆட்டோ, டாக்சி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் விதத்தில் சட்டவிரோதமாக தொழில் செய்து வருகின்றன. அவற்றை முற்றிலும் தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கி இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேசியதாவது:-
சிறுபான்மையின மக்களுக்கு உதவி என்ற பெயரில் மசூதி, தேவாலயம் கட்ட அரசு பணம் கொடுக்கிறது. புனித யாத்திரை செல்ல பணம் கொடுக்கிறார்கள். அதனால் ஏழை, எளிய ஆட்டோ தொழிலாளர்களுக்கு இலவசமாக அரசு, எப்.சி. செய்து கொடுக்க வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடக்கும். தமிழகம் முழுவதும் முழு அடைப்பு நடக்கும் சூழ்நிலை அமையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கிஷோர்குமார், மாநில செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இதில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்க மாவட்ட தலைவர் நாகராஜ், பொதுச்செயலாளர் தாமோதரன், துணை தலைவர்கள் மனோஜ், கண்ணன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
----------