விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பவானி
நகர்ப்புற வேலைவாய்ப்பு அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும். வேலைக்கான கூலியை வாரம்தோறும் வழங்க வேண்டும். நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஜம்பையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு பெருமாள் தலைமை தாங்கினார். சங்க தாலுகா செயலாளர் எஸ்.மாணிக்கம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பி.பழனிச்சாமி, ெபரியமோளபாளையம் கிளை செயலாளர் தமிழ்ச்செல்வன், சி.ஐ.டியு. சங்க தாலுகா செயலாளர் ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சக்திவேல், முத்துசாமி, கோபால், கண்ணன், வரதராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பவானி தொகுதி செயலாளர் ஆற்றலரசு, தந்தை பெரியார் திராவிட கழகம் வேணுகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேரூராட்சி செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.