அறச்சலூர் அருகே பால் பண்ணையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்


அறச்சலூர் அருகே பால் பண்ணையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
x

அறச்சலூர் அருகே பால் பண்ணையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

ஈரோடு

அறச்சலூர்

அறச்சலூர் அருகே ராசாம்பாளையம் பகுதியில் தனியார் பால் பண்ணை ஒன்று இயங்கி வருகிறது. கடந்த 13 நாட்களாக பால் பண்ணை அருகே உள்ள குரங்கன் ஓடை பகுதியில் வெள்ளை நிறத்தில் துர்நாற்றத்துடன் கழிவுநீர் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கூறி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தனியார் பால் பண்ணையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்ததும், மொடக்குறிச்சி தாசில்தார் இளஞ்செழியன், அறச்சலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறுகையில், 'சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால் பால் பண்ணையை மூட வேண்டும்,' என கோரிக்கை விடுத்தனர். இந்த பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாததால் பொதுமக்கள் இரவிலும் தங்களுடைய போராட்டத்தை தொடர்ந்தனர்.இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


Next Story