எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு அனைத்து ஊழியர் நலசங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று மாலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட பொருளாளர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். தமிழகத்தில் 186 எச்.ஐ.வி. ஆலோசனை மற்றும் பரிசோதனை மையங்களை மூட தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். எச்.ஐ.வி.க்கான கூட்டு மருந்து சிகிச்சை மையங்களை தனியார்மயமாக்குவதை கைவிட வேண்டும். இதில் தமிழக அரசு தலையிட்டு இந்த சுற்றறிக்கையை திரும்ப பெற வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


1 More update

Next Story