வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி போராட்டம்


வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி போராட்டம்
x

வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி வேலூர் தாலுகா அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது.

வேலூர்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட் விடுதலை) சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி வீடு திரும்பா போராட்டம் வேலூர் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் சரோஜா தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் மாணிக்கம், ஏழுமலை, சிம்புதேவன், பாத்திமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில கமிட்டி உறுப்பினர் இரணியப்பன், மாவட்ட பொறுப்பாளர் சுகுந்தன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். போராட்டத்தில் வேலூர் மாநகராட்சி 58-வது வார்டுக்கு உட்பட்ட விசுவநாதன்நகர், அண்ணாநகர், சரஸ்வதிநகர், வீட்டுவசதிவாரிய குடியிருப்பில் சுமார் 60 ஆண்டுகளாக பலர் குடியிருந்து வருகிறார்கள். அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கடந்த 6 ஆண்டுகளாக மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், இலவச வீட்டுமனை பட்டா உடனடியாக வழங்கக்கோரியும் கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அவர்களிடம் தாசில்தார் செந்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர் வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான அனைத்து நடைமுறைகளும் நிறைவடைந்து விட்டன. அரசு அனுமதி அளித்தவுடன் அனைவருக்கும் வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story