பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி போராட்டம்
அங்கன்வாடி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
விருதுநகர்
அருப்புக்கோட்டை,
தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் அங்கன்வாடி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்க தலைவி கலைச்செல்வி தலைமை தாங்கினார். அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். அங்கன்வாடிக்கு வழங்கப்படும் கியாஸ் சிலிண்டருக்கான தொகையை முழுமையாக வழங்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story