மயான பாதையை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கக்கோரி போராட்டம்


மயான பாதையை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கக்கோரி போராட்டம்
x
தினத்தந்தி 10 Sep 2023 7:15 PM GMT (Updated: 10 Sep 2023 7:15 PM GMT)

மயான பாதையை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கக்கோரி போராட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி கோதண்டராஜபுரத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு வயல்வெளிகளுக்கு நடுவில் மயானம் உள்ளது. இந்த மயானத்திற்கு செல்ல போதிய சாலை வசதி இல்லாமல் வயல் வெளி வழியாக உடலை தூக்கிச் செல்கின்றனர். இந்த நிலையில் மயானம் செல்வதற்கு சிமெண்டு சாலை அமைக்க அரசு நிதி ஒதுக்கி உள்ளது. இந்த மயானம் செல்லும் பாதை ஆக்கிரமிப்பில் உள்ளதால் சாலை அமைக்கும் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டர், தாசில்தார் ஆகியோரிடம் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு ஆக்கிரமிப்பில் உள்ள மயான பாதையை மீட்டு சிமெண்டு சாலை அமைக்கக்கோரி வருகிற 13-ந் தேதி (புதன்கிழமை) திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வாசலில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.


Next Story