சொத்துவரியை குறைக்க வலியுறுத்தி போராட்டம்; 39 பேர் கைது
திருச்செந்தூரில் சொத்துவரியை குறைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 39 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் சொத்துவரியை குறைக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 39 பேரை போலீசார் கைது செய்தனர்.
சொத்துவரி உயர்வு
திருச்செந்தூர் நகராட்சியில் சொத்துவரியை அரசு ஆணையை விட பல மடங்கு உயர்த்தியதாக கூறப்படுகிறது. இதைகண்டித்தும், சொத்துவரியை குறைக்க வலியுறுத்தியும் திருச்செந்தூர் அனைத்து சமுதாய மக்கள் நல இயக்கம் சார்பில் ஏராளமான பொதுமக்கள் நேற்று அரசு ஆஸ்பத்திரி அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், நகராட்சியை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
39 பேர் கைது
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 39 பேரை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
இப்போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.