ராசிபுரம் தட்டச்சு தேர்வு மையத்தில் வலது கை விரல்களால் தட்டச்சில் தேர்வு எழுதிய மாணவி
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே உள்ள முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில்நுட்ப வாரியத்தால் நேற்று முன்தினமும், நேற்றும் 2 நாட்களாக தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலம் இளநிலை மற்றும் முதுநிலை தேர்வு நடந்தது. நேற்று நடந்த தேர்வில் 450-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தட்டச்சு தேர்வு எழுதினர். அதன்படி ஆங்கில தட்டச்சு மேல்நிலை தேர்வில் வெண்ணந்தூர் விமல் தட்டச்சு பள்ளியில் பயிற்சி பெற்று வந்த வெள்ளப்பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்த மாணவி பாவனா ஸ்ரீ போலியோ நோயால் இடது கை பாதிக்கப்பட்ட நிலையில் வலது கை விரல்களால் மட்டும் தட்டச்சு தேர்வு எழுதி அசத்தினார். வலது கை விரல்களால் மட்டுமே தட்டச்சு செய்து தேர்வு எழுதிய மாணவி பாவனாஸ்ரீ-ஐ பலரும் பாராட்டினர். மேலும் மாணவி பாவனா ஸ்ரீ வலது கையால் மட்டுமே எழுதுவது முதல் அனைத்து வேலைகளையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இவர் வெண்ணந்தூர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருவது குறிப்பிடத்தக்கது.