உடுமலை அரசு கலைக் கல்லூரியில் முதல் கட்ட கலந்தாய்வு மூலம் 578 மாணவர்கள் சேர்ந்தனர்


உடுமலை அரசு கலைக் கல்லூரியில் முதல் கட்ட கலந்தாய்வு மூலம் 578 மாணவர்கள் சேர்ந்தனர்
x
தினத்தந்தி 6 Jun 2023 9:42 PM IST (Updated: 7 Jun 2023 7:06 AM IST)
t-max-icont-min-icon

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் பொதுப் பிரிவு மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு நேற்றுடன் முடிவடைந்தது. இதில் 578 மாணவர்கள் சேர்ந்தனர். 2-ம் கட்ட கலந்தாய்வு வருகிற 12-ந் தேதி நடைபெற உள்ளது.

திருப்பூர்

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் பொதுப் பிரிவு மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு நேற்றுடன் முடிவடைந்தது. இதில் 578 மாணவர்கள் சேர்ந்தனர். 2-ம் கட்ட கலந்தாய்வு வருகிற 12-ந் தேதி நடைபெற உள்ளது.

இது குறித்து கல்லூரி முதல்வர் சோ.கி.கல்யாணி கூறியதாவது:-

கலந்தாய்வு

2023-2024-ம் கல்வி ஆண்டிற்கு இளநிலை பாடப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடைபெற்று வருகிறது. நேற்று காலை இளநிலை அறிவியல் பாடப் பிரிவுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் 81 மாணவர்கள் சேர்ந்தனர். பிற்பகலில் நடைபெற்ற தமிழ் இலக்கிய பாடப்பிரிவில் 38 மாணவர்களும், ஆங்கில இலக்கிய பாடப்பிரிவில் 24 மாணவர்களும் சேர்ந்தனர்.

அந்த வகையில் நேற்று இயற்பியல் பாடப்பிரிவில் 23 மாணவர்களும், வேதியியல் பாடப்பிரிவில் 13 மாணவர்களும், கணிதவியல் பாடப்பிரிவில் 3 மாணவர்களும், புள்ளியியல் பாடப்பிரிவில் 3 மாணவர்களும், தாவரவியல் பாடப்பிரிவுகளில் 11 மாணவர்களும், அரசியல் அறிவியல் பாடப்பிரிவில் 8 மாணவர்களும், கணினி அறிவியல் பாடப்பிரிவில் 20 மாணவர்களும், தமிழ் இலக்கியப் பாடப்பிரிவில் 38 மாணவர்களும், ஆங்கில இலக்கியப் பாடப் பிரிவில் 24 மாணவர்களும் என மொத்தம் 143 மாணவர்கள் சேர்ந்து உள்ளனர்.

578 மாணவர்கள்

இளநிலை பாடப்பிரிவுகளில் மொத்தம் 864 இடங்கள் உள்ளன. முதல் கட்ட கலந்தாய்வின் முடிவில் இளநிலை கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவுகளில் 382 மாணவர்களும், இளநிலை அறிவியல் பாடப்பிரிவுகளில் 196 மாணவர்களும் என மொத்தம் 578 மாணவர்கள் சேர்ந்து உள்ளனர். இளநிலை பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு வருகிற 12-ந் தேதியன்று இனசுழற்சி மற்றும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நடைபெற உள்ளது.

2-ம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்ள வரும் மாணவர்கள் 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், ஆதார் அட்டை, சாதிச்சான்றிதழ் ஆகிய அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் 3 நகல்கள், பாஸ்போர்ட் சைஸ் 6 புகைப்படம், இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நகல், தரவரிசை நகல், கல்லூரி கட்டணம் உள்ளிட்டவற்றை கொண்டு வரவேண்டும். மாணவர்கள் பெற்றோர்களை அழைத்து வரவேண்டும்.

இவ்வாறு தெரிவித்து உள்ளார்.


Related Tags :
Next Story