மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்
திட்டச்சேரி, கீழ்வேளூரில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்
திட்டச்சேரி:
திட்டச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2023-24-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்துக்கு பள்ளி தலைமை ஆசிரியர் வேம்பு தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் அஸ்கர் நிஷா முன்னிலை வகித்தார். ஊர்வலமானது பள்ளியில் தொடங்கி முக்கிய வீதிகளின் வழியே திட்டச்சேரி பஸ் நிலையம் வந்து மீண்டும் பள்ளிக்கு சென்று முடிவடைந்தது. இதில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சந்தானம் மற்றும் ஆசிரியர்கள், திட்டச்சேரி பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் சென்று தங்கள் பள்ளியில் உள்ள வசதிகள், கட்டமைப்புகள் உள்ளிட்டவை குறித்து துண்டு பிரசுரம் வழங்கினர்.
இதேபோல் கீழ்வேளூர் ஒன்றியம் திருக்கண்ணங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 2023-24-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்துக்கு கீழ்வேளூர் வட்டார கல்வி அலுவலர்கள் மணிகண்டன், சிவக்குமார் ஆகியோர் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்தி, ஊராட்சி தலைவர் செல்வமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் திவ்யா, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.