மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்


மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 24 April 2023 10:55 PM IST (Updated: 24 April 2023 11:07 PM IST)
t-max-icont-min-icon

ஆற்காடு அருகே மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ஆற்காடு அடுத்த கீழ்மின்னல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தலைமை ஆசிரியை ரா.சி.வாசவி தலைமை தாங்கி அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பதால் அரசு வழங்கும் திட்டங்கள், சலுகைகள் உள்ளிட்டவை குறித்து விளக்கி கூறினார். மேலும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மின்னிமார்டின் அரசு பள்ளிகளில் சேர்ப்பதால் மாணவர்களுக்கான பயன்கள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனம் மூலமும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


Next Story