மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்


மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்
x

எருக்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

மயிலாடுதுறை

கொள்ளிடம்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம், எருக்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு, தலைமை ஆசிரியை மஞ்சுளா இளங்கோவன் தலைமை தாங்கினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி ஊர்வலத்தை தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழகஅரசு மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகம், சீருடை, பயிற்சி கையேடு, எழுது பொருட்கள், மடிக்கணினி, மிதிவண்டி ஆகியவற்றை இலவசமாக வழங்குகிறது. மேலும் தமிழ்வழியில் கல்விகற்கும் மாணவர்களுக்கு மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குகிறது. எனவே, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்றார். இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஆசிரிய-ஆசிரியைகள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு வீடு, வீடாக சென்று மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டனர்.






Next Story