மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி


மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 23 Jun 2023 3:45 AM IST (Updated: 23 Jun 2023 3:45 AM IST)
t-max-icont-min-icon

மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் தலைமை தாங்கி, தொடங்கிவைத்தார்.

பெற்றோர்களிடம் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது குறித்த துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது. மேலும் பள்ளிகளில் மாணவர்களுக்கு விலையில்லா நலத்திட்டங்கள், வாரத்தில் 5 நாட்கள் முட்டையுடன் கூடிய சத்தான உணவு வழங்கப்படுவது குறித்து எடுத்து கூறப்பட்டது. பள்ளியில் இருந்து புறப்பட்ட பேரணி தொப்பம்பட்டி கிராமத்தில் உள்ள தெருக்கள் வழியாக சென்று, மீண்டும் பள்ளியில் வந்து முடிவடைந்தது. பேரணியில் மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மனோரஞ்சிதம் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.


Next Story