பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய மாணவர் போக்சோ சட்டத்தில் கைது
கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய மாணவர் போக்சோ சட்டத்தில் கைது
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவரும் இன்னொரு கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 படித்து வரும் 17 வயது மாணவரும் காதலித்து வந்தனர். அப்போது இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாணவியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்படவே அவரது தாய் அவரை சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு மாணவியை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. பின்னர் இது குறித்து கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மாணவியை கர்ப்பமாக்கிய மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.