மாணவர் சட்டமன்ற தேர்தல்
மாணவர் சட்டமன்ற தேர்தல்
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் 2022-23-ம் ஆண்டுக்கான மாணவர் சட்டமன்ற தேர்தல் நடந்தது. இதில் 33 வாக்குகள் பெற்று முதல்-அமைச்சராக 5-ம் வகுப்பு மாணவன் சபரீஷ், துணை முதல்-அமைச்சராக ராஜேஷ் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து கல்வித்துறை அமைச்சராக தீக்ஷீதா, துணை அமைச்சராக மகாலட்சுமி, சுகாதாரத்துறை அமைச்சராக காவ்யாஸ்ரீ, துணை அமைச்சராக தமிழ்ச்செல்வி, உள்துறை அமைச்சராக கிரிதரன், துணை அமைச்சராக சித்தேஷ், விளையாட்டு துறை அமைச்சராக பிரவீன், துணை அமைச்சராக அஜய், நீர்வளத்துறை அமைச்சராக ஜனார்த்தன், உணவுத்துறை அமைச்சராக சுப ரஞ்சனா, துணை அமைச்சராக திவ்யாஸ்ரீ, வனத்துறை அமைச்சராக ஸ்ருதிகா, துணை அமைச்சராக அகிலன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்தலை பள்ளி தலைமை ஆசிரியர் மகர ஜோதி கணேசன் முன்னின்று நடத்தினார். வருகிற 20-ந் தேதி(திங்கட்கிழமை) அமைச்சரவை பதவியேற்பு விழா நடக்கிறது.