10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவர் தற்கொலை..!


10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவர் தற்கொலை..!
x

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி, காரைக்காலில் தமிழக அரசு பாடத்திட்டம் கடைபிடிக்கப்படுகிறது. கடந்த ஏப்ரலில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்றது. இத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுச்சேரி, காரைக்காலை சேர்ந்த 7 ஆயிரத்து 797 மாணவர்களும், 7 ஆயிரத்து 618 மாணவிகள் என மொத்தம் 15 ஆயிரத்து 415 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்த 13 ஆயிரத்து 738 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் 6 ஆயிரத்து 700 மாணவர்களும், 7 ஆயிரத்து 38 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து அரசு, தனியார் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 89.12 சதவீதம். புதுச்சேரி, காரைக்காலில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 78.92 ஆகும். கடந்த ஆண்டை விட 3.8% தேர்ச்சி விகிதம் குறைவு.

இந்த நிலையில், காரைக்காலில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். காரைக்கால் மாவட்டம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ஓட்டுநர் ஐயப்பன். இவரது மகன் ராகவன், இன்று 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான நிலையில் ராகவன் தேர்வில் தோல்வி அடைந்துள்ளார். இதன் காரணமாக மன அழுத்தத்தில் இருந்த மாணவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சம்பவம் குறித்து விரைந்து வந்த காரைக்கால் போலீசார் மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவன் ராகவன் உடலை பார்த்து பெற்றோர், கதறி அழுதனர். பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story