புளியங்குடியில் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


புளியங்குடியில் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x

புளியங்குடியில், பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்

தென்காசி

புளியங்குடி:

புளியங்குடியில், பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாணவி

தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணி மேல ரதவீதியை சேர்ந்தவர் கருப்பசாமி. கூலித்தொழிலாளி. இவரது மகள் காவியா (வயது 17). இவர் புளியங்குடியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இவருக்கு 2 தங்கைகள் உள்ளனர். காவியாவின் தந்தை கருப்பசாமிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக காவியாவின் தந்தைக்கும், தாய்க்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக காவியா மனமுடைந்து காணப்பட்டார்.

தற்கொலை

இந்தநிலையில் நேற்று காலை தங்கைகள் 2 பேரும் வழக்கம்போல் பள்ளிக்கு சென்று விட்டனர். காவியா பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். காவியாவின் தந்தையும், தாயும் கூலி வேலைக்கு சென்று விட்டனர்.

பின்பு மாலையில் வந்து பார்த்தபோது காவியா வீட்டில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து புளியங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பரத்லிங்கம் மற்றும் போலீசார் விரைந்து வந்து காவியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story