பணம் கட்ட முடியாததால் மாணவர் தற்கொலை
அருமனை அருகே கல்லூரியில் பணம் கட்ட முடியாததால் மாணவர் தற்கொலை
அருமனை,
அருமனை அருகே கல்லூரியில் பணம் கட்ட முடியாததால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கல்லூரி மாணவர்
அருமனை அருகே உள்ள முக்கூட்டுக்கல் பகுதியை சேர்ந்தவர் விஜயன். இவரது மகன் விஷ்ணு (வயது22). இவர் ஈரோடு மாவட்டத்தில் டிப்ளமோ படித்து வந்தார். அதனை பாதியில் விட்டு விட்டு கோவையில் ஒரு கல்லூரியில் சேர்ந்தார்.
இந்த நிலையில் விஷ்ணுவின் தாயார் தவறி விழுந்து கை முறிந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் விஷ்ணுவுக்கு கல்லூரியில் கல்வி கட்டணம் கட்ட முடியவில்லை. அத்துடன் படிப்பு பாதியில் நின்றது.
தொடர்ந்து விஷ்ணு மார்த்தாண்டம் அருகே உள்ள வேறொரு கல்லூரியில் சேர்ந்து படிக்க முயற்சி செய்தார். அதற்காக வீட்டில் ெபற்றோரிடம் பணம் கேட்டார். ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக கல்வி கட்டணம் கட்ட பணம் கிடைக்கவில்லை எனத்தெரிகிறது.
தற்கொலை
இதனால் மனமுடைந்த விஷ்ணு நேற்று தனது வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இதுகுறித்து அருமனை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விஷ்ணுவின் உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.