மாணவ மாணவிகளின் கலைத் திருவிழா
மாணவ மாணவிகளின் கலைத் திருவிழா
குண்டடம்
குண்டடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளின் கலைத் திருவிழா நடைபெற்றதுஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஒன்றியத்தில் உள்ள குண்டடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை மூலம் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் உள்ள ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான கலை திருவிழா போட்டிகள் நடைபெற்றது. விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர்கள் சந்திரகாந்தா மற்றும் பாமா ஆகியோர் தலைமை தாங்கினார். வட்டார ஒருங்கிணைப்பாளர் பாபு அனைவரையும் வரவேற்று பேசினார்.இப்போட்டியானது மூன்று நாட்கள் மொத்தம் ஆறு பிரிவுகளாக நடைபெற்றது.தோல் கருவி வாசித்தல், தனிநபர் நடனம் மற்றும் குழு நடனம், பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி, கதை கூறுதல், நாடகம், செதுக்கு சிற்பம் செய்தல், வில்லுப்பாட்டு, கையெழுத்து பயிற்சி, ஓவியம் வரைதல், திருக்குறள் ஒப்புவித்தல் ஆகிய போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் குண்டடம் வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர் அமுதா நன்றி கூறினார் கூறினார். இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள், குண்டடம் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் விழா குழுவில் உள்ள தலைமை ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
--