9-ம் வகுப்பு மாணவி திடீர் சாவு


9-ம் வகுப்பு மாணவி திடீர் சாவு
x

பள்ளிபாளையத்தில் வீட்டில் சாப்பிட்டு கொண்டு இருந்த 9-ம் வகுப்பு மாணவி திடீரென மயங்கி கீழே விழுந்து இறந்தார்.

நாமக்கல்

பள்ளிபாளையம்

9-ம் வகுப்பு மாணவி

பள்ளிபாளையம் எஸ்.பி.காலனி பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 40). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகள் லக்ஷனா (14). இவர் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு லக்ஷனா வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்தார். பின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு லக்ஷனா வாந்தி எடுத்துள்ளார்.

அதன்பிறகு மயங்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை 108 ஆம்புன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திாிக்கு கொண்டு சென்றனர்.

சாவு

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் லக்ஷனா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதைகேட்ட பெற்றோர் கதறி அழுதனர். பின்னர் லக்ஷனாவின் உடல் பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிபாளையத்தில் வீட்டில் சாப்பிட்டு கொண்டு இருந்த 9-ம் வகுப்பு மாணவி திடீரென மயங்கி கீழே விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story