பள்ளியில் மயங்கி விழுந்த மாணவர் சாவு


பள்ளியில் மயங்கி விழுந்த மாணவர் சாவு
x
தினத்தந்தி 17 Nov 2022 12:30 AM IST (Updated: 17 Nov 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் மயங்கி விழுந்து இறந்தார்.

தேனி

தேனி கிழக்கு ரத்தினம் நகரை சேர்ந்தவர் தீன் முகமது. இவருடைய மகன் அகமது அன்சாரி (வயது 15). இவர் தேனியில் உள்ள ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி வளாகத்தில் திடீரென மயங்கி விழுந்தார். பின்னர் அந்த மாணவருக்கு பள்ளியில் முதலுதவி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தேனியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு மாணவன் கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மாணவர் இறப்புக்காக காரணம் குறித்து தேனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story