ராமநத்தம் அருகே நீரில் மூழ்கி மாணவி சாவு
ராமநத்தம் அருகே நீரில் மூழ்கி மாணவி உயிாிழந்தாா்.
ராமநத்தம்,
ராமநத்தம் அடுத்த தச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் குமார். இவருடைய மனைவி சுதா. இவர்களுடைய மகள் ஜெயஸ்ரீ(வயது 8). இவள் கழுதூரில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள். செந்தில்குமார், தான் வசிக்கும் வீட்டின் அருகே புதிதாக வீடு கட்டி வருகிறார். அந்த வீட்டின் முன் செப்டிங் டேங் கட்டி, அதில் கட்டுமான பணிக்கு தேவையான தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சிறுமி ஜெயஸ்ரீ, தனது புதிய வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது அவள் எதிர்பாராதவிதமாக செப்டிக் டேங்கில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினாள்.
போலீசார் விசாரணை
இதைபார்த்த சுதா, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவளை மீட்டு சிகிச்சைக்காக ராமநத்தத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு ஜெயஸ்ரீயை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்த புகாரின்பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.