தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை


தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை
x

திருப்பத்தூர் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடந்தது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி, சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவசமாக ஏழை, எளிய மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். பள்ளிகளில் நிர்ணயித்த இடங்களைவிட விண்ணப்பம் அதிகம் வந்தால் குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த இடங்களில் சேர்க்கை பெற மொத்தம் 3 ஆயிரத்து 490 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில், 1,950 மனுக்கள் ஏற்கப்பட்டது. 1,350 விண்ணப்பம் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டது. 190 மனு பரிசீலனையில் உள்ளது. இதையடுத்து, 84 நர்சரி மற்றும் 74 மெட்ரிக் என 158 பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான குலுக்கள் நேற்று நடந்தது. அதில் 34 பள்ளிகளில் நிர்ணயித்த இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். மீதமுள்ள 124 பள்ளிகளில் சேர அதிக மாணவர்கள் விண்ணப்பித்து இருந்ததால் அந்த பள்ளிகளில் குலுக்கல் நடைபெற்றது. இதன் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் முன்னிலையில் சேர்க்கைக்கான மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

மேற்கண்ட தகவலை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story