நாமக்கல்லில் மாணவ- மாணவிகள் உற்சாகம்


நாமக்கல்லில் மாணவ- மாணவிகள் உற்சாகம்
x
தினத்தந்தி 1 Jun 2022 1:00 AM IST (Updated: 1 Jun 2022 1:01 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-1 தேர்வு முடிந்ததால் நாமக்கல்லில் மாணவ- மாணவிகள் உற்சாகத்துடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நாமக்கல்

:நாமக்கல்

தமிழகம் முழுவதும் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த 10-ந் தேதி தொடங்கியது. நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 200 பள்ளிகளில் இருந்து 9,988 மாணவர்கள், 9,853 மாணவிகள் என மொத்தம் 19 ஆயிரத்து 842 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். நேற்று கடைசி தேர்வாக இயற்பியல் பாடத்திற்கான தேர்வு நடந்தது. மதியம் 1.15 மணிக்கு தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவ, மாணவிகள் உற்சாகம் அடைந்தனர். நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவர்கள் தங்கள் கையில் இருந்த வினாத்தாள் மற்றும் பேப்பர்களை வீசி உற்சாகத்தில் துள்ளி குதித்தனர். மேலும் ஒருவர் மீது ஒருவர் சட்டையில் மை அடித்துக் கொண்டனர்.

அதேபோல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் தங்களது தோழிகளுடன் செல்பி எடுத்தும், முகத்தில் கலர் பொடிகளை தடவியும் பரவசம் அடைந்தனர். மேலும் சில இடங்களில் மாணவ, மாணவிகள் தேர்வு முடிந்து, விடுமுறை தொடங்கியதை கேக் வெட்டியும் கொண்டாடினர். சில மாணவிகள் தோழிகளின் பிரிவை நினைத்து கண்ணீர் சிந்துவதையும் பார்க்க முடிந்தது.


Next Story