மாணவி கூட்டு பலாத்காரம்:4 பேருக்கு காவல் நீட்டிப்பு


மாணவி கூட்டு பலாத்காரம்:4 பேருக்கு காவல் நீட்டிப்பு
x
தினத்தந்தி 16 May 2023 12:15 AM IST (Updated: 16 May 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

மாணவி கூட்டு பலாத்காரம்:4 பேருக்கு காவல் நீட்டிப்பு

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 9-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் பரமக்குடி 3-வது வார்டு கவுன்சிலரும், அ.தி.மு.க. நகர் அவைத்தலைவருமான சிகாமணி, மறத்தமிழர் சேனை நிறுவனர் புதுமலர் பிரபாகர், தனியார் ஜவுளி நிறுவன உரிமையாளர் ராஜாமுகமது மற்றும் புரோக்கர்களாக இருந்து செயல்பட்ட உமா மற்றும் கயல்விழி ஆகிய 5 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அ.தி.மு.க. நிர்வாகி சிகாமணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மற்ற 4 பேரும் சிறையில் உள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்று ராமநாதபுரம் மகிளா கோர்ட்டில் வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாத் வழக்கு விசாரணையை வரும் 19-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் விசாரணை தொடங்கப்பட உள்ளதாகவும் வழக்கினை விரைந்து முடித்து தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.


Next Story