பஸ் மோதி மாணவன் பலி


பஸ் மோதி மாணவன் பலி
x

பாப்பாரப்பட்டி அருகே பஸ் மோதி மாணவன் பலியானான். நீட் பயிற்சி வகுப்புக்கு சென்ற போது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

தர்மபுரி

பாப்பாரப்பட்டி

நீட் பயிற்சி வகுப்பு

பாலக்கோடு அருகே தொட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த திருப்பதி மகன்பூந்தமிழ் (வயது 17). பாப்பாரப்பட்டி தனியார் கல்லூரியில் நீட் தேர்வுக்காக பயிற்சிவகுப்புக்கு சென்று வந்தார்.

நேற்று தனது மோட்டார் சைக்கிளில் பாலக்கோட்டில் இருந்து பாப்பாரப்பட்டியில் உள்ள நீட் பயிற்சி மையத்துக்கு சென்றார். பாப்பாரப்பட்டி தர்மபுரி ரோட்டில் சென்ற போது மாணவன் பூந்தமிழ் மீது அந்த வழியாக வந்த டவுன் பஸ் மோதியது.

பரிதாப சாவு

இதில் தூக்கி வீசப்பட்ட பூந்தமிழ் மீது பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் பூந்தமிழ் தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்த பாப்பாரப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story