மாணவ தலைவர்கள் பதவி ஏற்பு விழா


மாணவ தலைவர்கள் பதவி ஏற்பு விழா
x

டி.ஆர்.எஸ். குளோபல் பப்ளிக் சீனியர் செகன்டரி பள்ளியில் மாணவ தலைவர்கள் பதவி ஏற்பு விழா நடந்தது.

ராணிப்பேட்டை

அரக்கோணம் டி.ஆர்.எஸ். குளோபல் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் மாணவர்கள் பதவி ஏற்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழு சேர்மன் டாக்டர். டி.ஆர். சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஸ்வர்ணலதா முன்னிலை வகித்தார். மாணவ துணை தலைவர் திவ்ய ஸ்ரீ வரவேற்றார். சிறப்பு விருந்தினராக இந்திய ராணுவ அவில்தார் குணாநிதி கலந்து கொண்டு வெவ்வேறு துறைகளில் மாணவர்களுக்கு மாணவர் தலைவர், துணைத் தலைவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து அதற்கான கொடிகளையும் அணிவித்தார்.

மாணவ தலைவராக 12-ம் வகுப்பு மாணவர் ஜோஷ்வா, துணைத் தலைவராக 12-ம் வகுப்பு மாணவி திவ்ய ஸ்ரீ ஆகியோர் பதவியேற்றனர். மேலும், மாணவர்களின் பல்வேறு வகையான திறமைகளை வளர்க்கக் கூடிய பள்ளியின் மார்ஸ், மெர்குரி, ஜூபிடர் மற்றும் வீனஸ் ஆகிய கிளப் தலைவர் மற்றும் துணை தலைவர்களுக்கு பதக்கங்களையும், கொடிகளையும் வழங்கி பதவிப் பிரமாணம் செய்து வைத்து பேசினார்.

அப்போது இங்கு பயிலும் மாணவர்கள் வைரம் போல் மிளிர்வதை கண்டு மகிழ்ச்சியடைவதாக கூறினார். நிகழ்ச்சியில் பதவியேற்ற மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். ஸ்ரீகிருஷ்ணா கல்வி குழு செயலாளர் டி.எஸ்.ரவிகுமார் மாணவர்களிடையே பேசியபோது தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் உங்களுக்கென வழங்கப்பட்ட பொறுப்புகளை உணர்ந்து பொறுப்புடன் செயல்பட்டு மற்ற மாணவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். முடிவில் பள்ளி மாணவ தலைவர் ஜோஷ்வா நன்றி கூறினார்.

1 More update

Next Story