மாணவி பலாத்காரம்-பெற்றோருக்கு கொலை மிரட்டல்; ஒருவர் கைது


மாணவி பலாத்காரம்-பெற்றோருக்கு கொலை மிரட்டல்; ஒருவர் கைது
x

மாணவி பலாத்காரம்-பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை

கீரனூர்:

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள நவம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் கார்த்திக். இவர் 17 வயதுடைய பிளஸ்-2 மாணவி ஒருவரை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அறிந்த மாணவியின் பெற்றோர், கார்த்திக்கை கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், அவரது நண்பரான பழனியின் மகன் ரமேஷ் ஆகியோர் மாணவியின் வீட்டுக்குள் புகுந்து அவரது பெற்றோரை தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக மாணவியின் தாய் கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் லதா இது குறித்து கார்த்திக், ரமேஷ் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்தார். தலைமறைவான கார்த்திக்கை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story