மாணவர் பலி


மாணவர் பலி
x

மோட்டார் சைக்கிள் விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலியானார்

தூத்துக்குடி

ஸ்பிக் நகர்:

தூத்துக்குடி அருகே அத்திமரப்பட்டி சாலையில் நேற்று முன்தினம் இரவு சென்ற மோட்டார்சைக்கிள், விவசாய சங்க அலுவலகம் அருகில் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றவர் சம்பவ இடத்திலேயே பலியானார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தூத்துக்குடி பிரையண்ட் நகர் 7-வது தெருவை சேர்ந்த அகஸ்டின் மகன் சாம் (வயது 22) என்பது தெரியவந்தது. அவர் பாலிடெக்னிக் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த விபத்து குறித்து முத்தையாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Next Story