மாணவி சத்யபிரியா மரணம் - சக மாணவிகளிடம் ரகசிய ஒப்புதல் வாக்குமூலம்


மாணவி சத்யபிரியா மரணம் - சக மாணவிகளிடம் ரகசிய ஒப்புதல் வாக்குமூலம்
x

மாணவி சத்யப்பிரியா மரணம் தொடர்பாக சக மாணவிகளிடம் ரகசிய ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது.

சென்னை,

சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் தோழிகளுடன் நின்றிருந்த கல்லூரி மாணவி சத்யப்பிரியாவை, சதீஷ் என்ற இளைஞர் ரெயில் முன் தள்ளிவிட்டுக் கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த கொலை தொடர்பாக வாலிபர் சதீசை ரெயில்வே போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதனை தொடர்ந்து மாணவி கொலை வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. வழக்கு தொடர்பான ஆவணங்களும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில், மாணவி சத்யப்பிரியா மரணம் தொடர்பாக சம்பவத்தை நேரில் பார்த்த சக மாணவிகள் 4 பேரிடம் ரகசிய ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது. சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.

மேலும் நாளை சத்யாவின் தாயார் மற்றும் உறவினர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதனால் இந்த வழக்கு விசாரணை தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story