மதுரையில் மாணவிக்கு பாலியல் தொல்லை; பல்கலைக்கழக பேராசிரியர் அதிரடி கைது


மதுரையில் மாணவிக்கு பாலியல் தொல்லை; பல்கலைக்கழக பேராசிரியர் அதிரடி கைது
x

மதுரையில், முதுநிலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பல்கலைக்கழக பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.

மதுரை

நாகமலைபுதுக்கோட்டை,


மதுரையில், முதுநிலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பல்கலைக்கழக பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.

மாணவிக்கு பாலியல் தொல்லை

மதுரை மாடக்குளத்தைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 60). பேராசிரியரான இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறைத்தலைவராக உள்ளார். கடந்த மார்ச் 31-ந்தேதியுடன் பணியில் இருந்து ஓய்வு பெற்ற இவரை நடப்பு கல்வியாண்டு முடியும் வரை (வருகிற ஜூன் மாதம் வரை) மேலும் 3 மாதங்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் பணி நீட்டிப்பு செய்து உத்தரவிட்டது. அதன்படி கருப்பையா பணி நீட்டிப்பில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் உளவியல் துறையில் முதுநிலை 2-ம் ஆண்டு படிக்கும் மாணவிக்கு துறைத்தலைவரான கருப்பையா பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி அந்த மாணவி பல்கலைக்கழக நிர்வாகத்தில் புகார் கொடுத்தார்.

பேராசிரியர் கைது

பின்னர் அந்த மாணவி பாலியல் தொல்லை குறித்து தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ராகார்க்கிடமும் புகார் கொடுத்தார். ஐ.ஜி., உத்தரவின் பேரில் சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக உளவியல் துறைத்தலைவர் கருப்பையாவைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கருப்பையா கடந்த சில மாதங்களாகவே மாணவிகளின் உடை குறித்தும், இரட்டை அர்த்தத்திலும் பேசி வந்ததாகவும், மாணவர்களை தரக்குறைவாக திட்டி வந்ததாகவும் கூறி அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் பல்கலைக்கழக நிர்வாகம் குழு அமைத்து விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.


Related Tags :
Next Story